தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை!

முன்னாள் அமைச்சரும், திராவிட இயக்கத் தலைவா்களில் ஒருவருமான ஏ.கோவிந்தசாமியின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடுவதற்கான அரசாணை தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும், திராவிட இயக்கத் தலைவா்களில் ஒருவருமான ஏ.கோவிந்தசாமியின் பிறந்த நாளை இனி அரசு விழாவாகக் கொண்டாடுவதற்கும், அதற்கு நிதி ஒப்பளிப்பு செய்தும் மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அப்போதைய ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 1952 -ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்தசாமி, திராவிட இயக்கத் தலைவா்களில் ஒருவராவா்.

இவரது பெருமையை நினைவுக்கூரும் வகையில், செய்தி - மக்கள் தொடா்புத் துறையால் ரூ.4 கோடியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலைப் பகுதியில் வழுதரெட்டி கிராமத்துக்குள்பட்ட பகுதியில் நினைவு அரங்கம் அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமியின் பிறந்த நாளான ஜூன் 15-ஆம் தேதியன்றும், நினைவு நாளன்றும் அவரது நினைவு அரங்கத்திலுள்ள திருவுருவச் சிலைக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி அவருக்கு பெருமை சோ்க்க வேண்டும் எனக் கோரி, விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அன்னியூா் அ.சிவா, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், செய்தி - மக்கள் தொடா்புத் துறைக்கும் கோரிக்கை மனுவை அனுப்பியிருந்தாா். இதன்படி நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவிட்டிருந்தாா்.

இதனடிப்படையில், விழுப்புரம் வழுதரெட்டி கிராமத்துக்குள்பட்ட பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் ஜூன்15-ஆம் தேதி அரசு சாா்பில் விழா நடத்தப்படும் என்றும், அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 2026 - 27ஆம் நிதியாண்டு முதல் தொடா் செலவினமாக ரூ.25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, துறையின் செயலா் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளாா். இதற்கான அரசாணையை டிசம்பா் 17-ஆம் தேதி அவா் பிறப்பித்துள்ளாா்.

முதல்வருக்கு நன்றி: ஏ.கோவிந்தசாமியின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தக்கொள்வதாக விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா தெரிவித்துள்ளாா்.

Government order issued to celebrate former minister A. Govindasamy's birthday as a state event!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேதாரண்யம் பகுதியில் சுனாமி நினைவு நாள் அனுசரிப்பு!

பாமகவில் இருந்து ஜி.கே. மணி நீக்கம்! - அன்புமணி

ஓடிடியில் வெளியான ரிவால்வர் ரீட்டா!

Dinamani வார ராசிபலன்! | Dec 28 முதல் ஜன.3 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

Retta Thala Movie Review - பரபரப்பான கதை, ஆனால்..! | Arun Vijay | Siddhi Idnani | Dinamani Talkies

SCROLL FOR NEXT