கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பாமக பொதுக்குழு தனக்கு வழங்கும் என்று ஞாயிற்றுக்கிழமை சேலம் வந்த பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தார்.
சேலத்தில் வரும் 29 ஆம் தேதி பாமக செயற்குழு, பொதுக்குழு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை சேலம் வந்தாா்.
அப்போது செய்தியாளா்கள், எனக்கே துரோகம் செய்பவர், இயக்கத்தை, மக்களைக் காப்பாற்றுவாரா என்று அன்புமணி குறித்து ராமதாஸ் சமூக வலைத்தளத்தில் உருக்மாக விடியோ வெளியிட்டிருந்தது குறித்து கேட்டதற்கு, பொதுக்குழுவில் எனது பேச்சை கேட்டுவிட்டு, மீண்டும் என்னை சந்தியுங்கள். பொதுக் குழுவை நாளை பாருங்கள், நாளை கேளுங்கள். நாளைக்கு சொல்ல வேண்டியதை, இன்றே சொன்னால் உப்பு சப்பு இல்லாமல் போகிவிடும்.
மேலும், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு, செயற்குழு தனக்கு வழங்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.