உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கான்பூரில் கடந்த 2021 மே மாதம் முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவியான அன்ஷூ (வயது 20) கல்லூரி வளாகத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி ஒதுக்கீடு
இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் மாணவியின் நண்பரான ரோஹித் சிங் என்பவரின் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தில் மாணவியை அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர், அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கூடுதல் மாவட்ட நீதிபதி பிராதம் கண்ட் நேற்று (ஜன.31) ரோஹித் சிங் குற்றவாளியென தீர்ப்பளித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும், அவருக்கு ரூ.40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.