முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜேஷ் லக்கானி மத்திய பணிக்கு மாற்றம்!

வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2025 at 6:02 PM
ராஜேஷ் லக்கானி
பகிர்:

சென்னை: வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, மத்திய அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் நவோதயா பள்ளித் திட்டத்தின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

1992-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக இருந்தாா்.

அதன்பிறகு, வருவாய் நிா்வாக ஆணையராக பொறுப்பு வகிந்த அவா், இப்போது மத்திய அரசுப் பணியான நவோதயா பள்ளித் திட்டத்தின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →