கிராமி விருதுடன் சந்திரிகா டன்டன் 
தற்போதைய செய்திகள்

2025 கிராமி விருதுகள்: இந்திய வம்சாவளிப் பெண் வெற்றி!

இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு கிராமி விருது வழங்கப்பட்டதைப் பற்றி...

DIN

2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் இசைக்கலைஞருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருதின் 67வது விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று (பிப்.2) நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகி சந்திரிகா டன் டன் (வயது 71) சிறந்த தற்கால ஆல்பம் (BEST NEW AGE ALBUM) எனும் பிரிவில் அவரது ’த்ரிவேணி’ இசை ஆல்பத்திற்காக கிராமி விருதை வென்றுள்ளார்.

இதையும் படிக்க: ’எஸ்டிஆர் - 50’ தயாரிப்பாளராக களமிறங்கும் நடிகர் சிம்பு!

தென் ஆப்பிரிக்க புல்லாங்குழல் இசைக்கலைஞரான வௌட்டர் கெல்லர்மேன் மற்றும் ஜப்பானிய செல்லிஸ்ட் எரு மாட்சுமோட்டோ ஆகியோருடன் இணைந்து அவர் உருவாக்கிய இந்த ‘த்ரிவேணி’ இசை ஆல்பம் பல்வேறு முன்னனி இசைக்கலைஞர்களுடன் இந்தப் பிரிவில் போட்டியிட்டு வென்றுள்ளது.

முன்னதாக, சென்னையில் வளர்ந்த சந்திரிகா மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், அமெரிக்காவில் குடியேறி அங்கு தொழிலதிபராக உயர்ந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதன் முதலாக அவர் வெளியிட்ட ’சோல் கால்’ இசை ஆல்பம் அந்தாண்டின் கிராமி விருதுகளில் இதேப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

SCROLL FOR NEXT