முதல்வர் மு.க. ஸ்டாலின்  கோப்புப் படம்
தற்போதைய செய்திகள்

காலநிலை மாற்ற கையேடு அரசால் வெளியிடப்படும்: முதல்வர்

தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை.

DIN

காலநிலை மாற்ற கையேடு அரசால் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாள் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப். 4) தொடக்கிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் சூழலியல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். கால நிலை மாற்றத்தை கல்வி மூலம் புகட்ட அரசு திட்டமிட்டுள்ளது. காலநிலைக்கு என்று கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்.

இதையும் படிக்க: பாபா ராம்தேவுக்கு மீண்டும் பிடிவாரண்ட்!

மாணவர்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டுச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்ற கையேடு அரசால் வெளியிடப்படும். வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால் ரூ. 4 லட்சம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடர்களை சமாளித்து மீண்டெக்கக்கூடிய சமூகமாக வளர வேண்டும். உலக நாடுகள் பல்வேறு இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்து வருகின்றன.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவை எதிர்கொள்ள மக்கள் அது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேளாண், நீர்வளத் துறைக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

காந்தா டிரைலர் அறிவிப்பு விடியோ!

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

SCROLL FOR NEXT