கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சென்னையில் கடும் பனி மூட்டம்: ரயில், விமானங்கள் சேவை பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னைக்கு வரவேண்டிய ரயில்கள் மற்றும் விமானங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

DIN

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னைக்கு வரவேண்டிய ரயில்கள் மற்றும் விமானங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

சென்னை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் சாலையில் வாகனங்களே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விரைவு ரயில்களின் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று சென்னை விமான நிலைய பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவுவதால், கோலாலம்பூரில் இருந்து சென்னை வரவேண்டிய விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது.

மும்பையில் இருந்து சென்னை வரவேண்டிய விமானம் கடுமையான பணி மூட்டம் காரணமாக பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

மேலும், சென்னையிலிருந்து கொழும்பு, தில்லி, மதுரை, கோவை, துபை உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பன்மடங்கு உயர்ந்துள்ள விமான டிக்கெட் விலை

உறக்கத்தைத் தொலைத்த பயணம்... ரோஸ் சர்தானா!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஷஃபாலி வர்மா!

காரம்... ஆயிஷா!

புதினுக்கு பகவத் கீதை அன்பளிப்பு! பிரதமர் மோடி சநாதன தர்மத்தின் தூதர்: கங்கனா ரணாவத் பேச்சு!

SCROLL FOR NEXT