தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது. தவெக அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் இதில் கலந்துகொண்டுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதுகுறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விசிகவில் இருந்து சமீபத்தில் தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில்தான், விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
பாஜக, ஆம் ஆத்மி, திமுக, திரிணமூல் காங்கிரஸ் என பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக செயல்பட்டுள்ளார் பிரசாந்த் கிஷோர்.
மேலும் தேர்தல் நேரங்களில் பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்துள்ள பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜன் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் விஜய்யுடன் பிரசாந்த் கிஷோரின் இந்த சந்திப்பானது தமிழக அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.