வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பிரதமர் வாழ்த்து!
தைப்பூச நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து.
தைப்பூசத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!
முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும். இந்தப் புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
Advertisement
Advertisement
இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், செயலூக்கத்தையும் கொண்டுவரட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தமிழ்நிலக் கடவுளைப் போற்றுவோம்: விஜய் வாழ்த்து!
தைப்பூசத் திருவிழாவையொட்டி தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் இன்று(பிப். 11) அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பூசத்தையொட்டி அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.