தற்போதைய செய்திகள்

மீண்டும் சின்ன திரையில் நதியா!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை நதியா.

DIN

நடிகை நதியா சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். இந்நிகழ்ச்சியின் 10-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சிறு குழந்தைகள் தங்களது பாடும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பாடகர்கள் மனோ, சித்ரா மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிறுதோறும் இரவு 6.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த வாரம் திருமண வரவேற்பு பாடல்கள் சுற்று நடைபெறவுள்ளது. போட்டியாளர்கள் திருமண வரவேற்பு பாடல்களைப் பாடுகிறார்கள், போட்டியாளர்களின் பெற்றோர்களும் திருமண கோலத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை நதியா பங்கேற்றுள்ளார். இது தொடர்பான முன்னோட்டக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நதியா தமிழ் சினிமாவில் 80களில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர். இவர் பூவே பூச்சூடுவா, நிலவே மலரே, பாடு நிலாவே, எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சண்டை உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார் நதியா. மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் சிறப்புத் தோற்றத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

வேன் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT