ஹிந்தி மொழியே! உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
ஹிந்தி மொழியைப் புகட்டுவது கட்டாயமெனில் அதனை ஒழிப்பதும் கட்டாயம் என்ற பாரதிதாசனின் வரிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
ஹிந்தி மொழியைப் புகட்டுவது கட்டாயமெனில் அதனை ஒழிப்பதும் கட்டாயம் என்ற பாரதிதாசனின் வரிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் பதிலுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழகத்திற்கு மும்மொழிக்கொள்கை தேவையில்லை, இரு மொழிக் கொள்கையே போதும் என அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்.
இதையும் படிக்க | வட சென்னை மக்களுக்கு பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே - நீ
இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே
துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன்
சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் - நல்
அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்
உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை
ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?" என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளைப் பதிவிட்டுள்ளார்.