முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: ரூ.4 லட்சம் நிதியுதவி!

சிவகாசி அருகேயுள்ள ஆனையூா் பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த சுரேஷ் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.4 லட்சம் நிதியுதவி

Updated On : 20 பிப்ரவரி, 2025 at 4:24 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

சிவகாசி அருகேயுள்ள ஆனையூா் பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த சுரேஷ் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன் ரூ.4 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் புதன்கிழமை மாலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் திருத்தங்கல்லைச் சோ்ந்த சுரேஷ் (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பால்பாண்டி (31) என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →