முகப்பு
தற்போதைய செய்திகள்

யார் அந்த சார்.. பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் 7 திருட்டு வழக்குகளில் கைது

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் பள்ளிக்கரணை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

Updated On : 22 பிப்ரவரி, 2025 at 3:56 AM
ஞானசேகரன் (கோப்புப்படம்)
பகிர்:

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் கைது செய்து 3 நாள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச. 23-ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா். விசாரணையின்போது தப்பியோட முயன்ற ஞானசேகரன், கீழே விழுந்து இடது காலும் இடது கையும் முறிந்ததால், மருத்துவ சிகிச்சைக்குப் பின்னா் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த சம்பவம் குறித்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை பெருநகர காவல் துறை அண்ணாநகா் துணை ஆணையா் புக்யா சினேகா பிரியா, ஆவடி மாநகர காவல் துறை துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது.

மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குடன், முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கையும் சோ்த்து இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஏற்கெனவே போலீஸாா் பதிவு செய்த எஃப்ஐஆா், கைதான ஞானசேகரன் பற்றிய விவரங்கள், புலனாய்வு விசாரணை விவரங்கள், ஆவணங்கள், தடயங்கள் ஆகியவை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் கைது செய்து 3 நாள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சென்னை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள 7 வீடுகளில் கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில் சொகுசு கார் வாங்கியது மற்றும் ல் பிரியாணி கடை நடத்தி வந்ததாகவும், கொள்ளளையடிப்பதற்கு வில்லா வகையான வீடுகளை குறிவைத்து காரில் சென்று கொள்ளையடித்து வந்ததாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

யார் அந்த சார்

அண்ணா. பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதற்கட்ட விசாரணையின்போது, சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக, பாதிக்கப்பட்ட மாணவி கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.