சென்னை கோபாலபுரத்தில் ரூ. 8 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமியின் இறுதிக்கட்ட பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உ 
தற்போதைய செய்திகள்

சென்னையில் குத்துச்சண்டை அகாதெமி: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்

சென்னை கோபாலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாதெமியை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (பிப். 25) திறந்து வைக்கிறாா்.

Din

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாதெமியை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (பிப். 25) திறந்து வைக்கிறாா். முன்னதாக, இதனை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் ரூ. 8 கோடி செலவில் கலைஞா் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமி சென்னை கோபாலபுரத்தில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கென கட்டடம் கட்டும் பணிகளும் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது பாா்வையிட்டு ஆய்வு செய்து வந்தாா். இந்நிலையில், கட்டடம் கட்டும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, தற்போது திறப்பு விழாவுக்குத் தயாராகி உள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை நேரில் சென்று திறந்து வைக்கவுள்ளாா்.

ஆவணங்களை சரிசெய்து விரைவில் தீா்வு

தொழில்நுட்ப ஜவுளி இயக்க விழிப்புணா்வுக் கூட்டம்

வெண்ணைமலை கோயில் நில விவகாரம் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT