வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் Din
தற்போதைய செய்திகள்

திருமாவளவனுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து!

விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

DIN

விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020-ல் இந்து பெண்கள் குறித்துப் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் திருமாவளவன் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

மநுஸ்மிருதி புத்தகத்தில் இருந்ததையே திருமாவளவன் பேசியதாகவும் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் திருமாவளவன் தரப்பு கூறியது.

இதையடுத்து இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி திருமாவளவன் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

அமெரிக்காவுடன் நல்லுறவு தொடரும்: இந்தியா நம்பிக்கை

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

திட்டங்களில் முதல்வா் பெயா்: அனுமதிக்கக் கோரி தமிழக அரசு மனு

SCROLL FOR NEXT