தற்போதைய செய்திகள்

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: குஷ்பு உள்பட பாஜகவினர் கைது

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்தும் மாணவிக்கு நீதி கோரியும் பாஜக மகளிரணி சார்பில் இன்று(ஜன. 3) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மதுரை முதல் சென்னை வரை பேரணி நடத்த மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. எனினும் தடையை மீறி மதுரையில் பாஜக மகளிரணித் தலைவர் உமாரதி தலைமையில் குஷ்பு உள்ளிட்ட மகளிர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பேரணிக்கு அனுமதி தருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அனுமதி தரமாட்டார்கள் என்பது முன்பே தெரியும் என்று குஷ்பு கூறியுள்ளார்.

மேலும், மதுரையில் நடக்கவிருந்த பேரணிக்குச் செல்ல திண்டுக்கல் மேற்கு மாவட்ட மகளிரணியினர் பழனியிலிருந்து புறப்பட்ட நிலையில் அவர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மதுரையில் பாஜக மகளிரணியினர் கைது செய்யப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், மகளிரணி நிர்வாகிகள் பலரை காவல்துறையினர் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT