அண்ணா பல்கலை. (கோப்புப்படம்) Din
தற்போதைய செய்திகள்

சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT