கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

சிறுமியை எரித்துக் கொல்ல முயன்ற சகோதரன் கைது!

மகாராஷ்டிர மாநிலத்தில் சகோதரனால் சிறுமி எரித்து கொல்ல முயற்சிக்கப்பட்டதைப் பற்றி..

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் 17 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றிக் கொல்ல முயன்ற சகோதரன் கைது செய்யப்பட்டார்.

தாணே மாவட்டத்திலுள்ள நவிமும்பை நகரத்தின் ஏபிஎம்சி பகுதியில் தன்னுடைய 17 வயது சகோதரி வேறொரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த நபர், அந்த சிறுமியின் மீது பெட்ரோலை ஊற்றி கொல்ல முயன்றுள்ளார்.

மேலும், அந்த சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து சிகிரெட் லைட்டரால் கொளுத்தி விடுவேன் என அந்த நபர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பள்ளிக்கூட வாசலில் மாணவன் கத்தியால் குத்திக் கொலை!

பின்னர், தனது சகோதரனிடம் இருந்து தப்பித்த அந்த சிறுமி நவி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அந்த நபர் மீது பாரத் நியாய் சன்ஹிதா பிரிவு 109 கீழ் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மூன்றாவதும் பெண் குழந்தையைப் பெற்றதாக தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT