தற்போதைய செய்திகள்

ரோஜா - 2 தொடரில் சுந்தரி சீரியல் நடிகர்!

ரோஜா - 2 தொடரில் சுந்தரி சீரியல் நடிகர் ஜிஷ்ணு மேனன் இணைந்துள்ளார்.

DIN

ரோஜா - 2 தொடரில் சுந்தரி சீரியல் நடிகர் ஜிஷ்ணு மேனன் இணைந்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர், கடந்த 2022 டிசம்பரில் நிறைவு பெற்றது.

இத்தொடருக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, ரோஜா தொடரின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

இத்தொடர் சரிகம யூடியூப் சேனலில் இன்று(ஜன. 6) முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணிக்கு ரோஜா - 2 தொடர் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஜா தொடரின் முதல் பாகத்தில் நடித்த பிரியங்கா நல்காரியே, இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடிக்கிறார். பிரியங்கா நல்காரிக்கு ஜோடியாக மூன்று முடிச்சு தொடர் நாயகன் நியாஸ் நடிக்கிறார். மேலும் இத்தொடரில் எதிர்நீச்சல் நடிகை ஹரிப்பிரியா பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த சுந்தரி தொடரில் கார்த்திக் பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த ஜிஷ்ணு மேனன், ராகவி என்ற புதிய தொடரில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ரோஜா தொடரின் 2 ஆம் பாகத்தில் நடிகர் ஜிஷ்ணு மேனன் நடிக்கவுள்ளதாக விடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT