காண்டாமிருகக் கொம்புகள்  (கோப்புப் படம்)
தற்போதைய செய்திகள்

ரூ.3 கோடி மதிப்பிலான காண்டாமிருகக் கொம்புகள் பறிமுதல்! 4 பேர் கைது!

புது தில்லியில் காண்டாமிருகத்தின் கொம்புகளைக் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

DIN

புது தில்லியில் காண்டாமிருகத்தின் கொம்புகளை பதுக்கிய 4 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அம்மாநிலக் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த ஜன.9 அன்று லாக்பட் நகர் பகுதியில் காண்டாமிருகத்தின் கொம்புகளை வாங்கும் வாடிக்கையாளரைப்போல ஒரு கான்ஸ்டெபிள் சென்றுள்ளார். கடத்தல் காரர்களுடன் அதன் விலையை பேரம் பேசி ரூ.1 கோடி என முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த கொம்பை கைமாற்ற அவர்கள் தயாரானபோது கடத்தல்காரர்களின் வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த சோதனையில் வெள்ளை காண்டாமிருகத்தின் 2 கொம்புகளை அவர்கள் விற்பதற்காக கடத்தி பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிக்க: சிங்கப்பூர் அதிபர் முதல்முறையாக இந்தியா வருகை!

இதனைத் தொடர்ந்து, அதில் தொடர்புடைய உத்தம் நகர் பகுதி குடியிருப்புவாசிகளான தீபக் சர்மா (வயது 57), சண்ட் ராம் (57), சுரேஷ் குமார் (57) மற்றும் அனில் குமார் சேதி (60) ஆகிய 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர்களிடம் அதற்கு சட்டபூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லாததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட காண்டாமிருக்கத்தின் கொம்புகளுக்கு சர்வதேச சந்தையில் ரூ.3 கோடி அளவிலான மதிப்புள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போகாத ஊருக்கு வழி!

தனியாா் சரக்குப் பெட்டக நிலையத்தில் தீ

ஒரே இலக்கை கொண்டவா்கள் கூட்டணி சேருவது தவறல்ல: ஜி.கே.வாசன்

கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையம் அக்.20-இல் திறப்பு

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT