ஏற்காடு ஏரியில் படகில் பயணித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள் 
தற்போதைய செய்திகள்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

ஏற்காட்டில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி தமிழகத்திலிருந்தும், கா்நாடகம், புதுச்சேரி, கேரளம் பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நண்பா்கள், குடும்பத்துடன் குவிந்தனர்.

DIN

சேலம் : சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி தமிழகத்திலிருந்தும், கா்நாடகம், புதுச்சேரி, கேரளம் பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நண்பா்கள், குடும்பத்துடன் குவிந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் விடுமுறை தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

ஏற்காடு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஐந்தினை பூங்கா, ரோஜா தோட்டம், லேடிசீட், ஜென்சீட், கிளியூா் நீா்விழ்ச்சி, கரடியூா் காட்சி பகுதி, பக்கோட காட்சி பகுதி, மஞ்சக்குட்டை காட்சி பகுதிகளுக்குச் சென்று கண்டு மகிழ்ந்தனா்.

அதிகமாக காணப்படும் பனிப்பொழிவின் குளிரின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் ஏரி பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குறிப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தொடர் விடுமுறை இறுதி நாள் என்பதாலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

ஏற்காடு வந்துள்ள இவர்கள் படகு இல்லத்தில் நீண்ட நேரம் காத்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர்.

ஏற்காட்டில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் குளிரின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.

குளிர் அதிகமாக இருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் பனிமூட்டத்தின் மத்தியில் படகு சவாரி செய்தனர்.

சுற்றுலாப் பயணிகள் வருகையால் சாலையோரங்களில் உள்ள கடைகளில் பொருள்கள் விற்பனை அதிகரித்தன. சுற்றுலாத் துறைக்கும் கணிசமான வருவாய் கிடைத்தது.

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மலைப்பாதையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து திடல்: செளதியின் கனவுத் திட்டம்!

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

‘தோ்தல் நேர வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு’

ராஜராஜ சோழனின் சதயவிழா! தஞ்சை மாவட்டத்தில் நவ.1 உள்ளூா் விடுமுறை!

இரு சக்கர வாகனத்துக்குள் நுழைந்த பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினா்!

SCROLL FOR NEXT