தற்போதைய செய்திகள்

தில்லியில் அடர் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பு!

தில்லியில் வியாழக்கிழமை காலை அடர் பனிமூட்டம் காரணமாக விமானப் பயண அட்டவணை பாதிக்கப்பட்டது,

DIN

புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை காலை அடர் பனிமூட்டம் காரணமாக விமானப் பயண அட்டவணை பாதிக்கப்பட்டது, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாக வந்தது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, தில்லியில் வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 12.6 டிகிரி செல்சியஸாக பதிவானது.

காற்றின் தரக் குறியீடு

தேசியத் தலைநகரில் இன்று காலை 8 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 262 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது.

அதாவது, காற்றுத் தரக் குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50-க்கும் இடையிலான தரக் குறியீடு 'நல்லது', 51 - 100 'திருப்திகரமானது', 101 - 200 'மிதமானது', 201-300 ’மோசம்’ பிரிவு; 301-400 ‘மிகவும் மோசம்’; 401-450- ’கடுமை’; 451- 500 ’மிகவும் கடுமை’ என கருதப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு பிரயாக்ராஜில் 12.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மகா கும்பமேளா நடைபெற்று வரும் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் வியாழக்கிழமை காலை அடர் மூடுபனி நிலவி வரும் நிலையில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் புனித சங்கமமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கானோா் காத்திருக்கின்றனர்.

அயோத்தி நகரத்தை குளிர் அலை வாட்டி எடுத்து வரும் நிலையில், அதன் சில பகுதிகளில் மூடுபனி சூழ்ந்து காணப்படுகிறது.

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளும் காலை அடர் மூடுபனி சூழ்ந்து காணப்படுகிறது. மேற்கு வங்கம், சைந்தியா சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் வடக்கு 24 பர்கானாக்களின் சில பகுதிகளும் அடர் மூடுபனி சூழ்ந்து காணப்படுகிறது.

இதேபோன்று ஒடிசாவின் பூரியின் சில பகுதிகளில் அடர் மூடுபனி சூழ்ந்து குளிர் வாட்டி எடுத்தது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து குளிர் அலை வாட்டி எடுத்து வருகிறது.

ஸ்ரீநகரில் வியாழக்கிழமை காலை 5.30 மணியளவில் மைனஸ் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உ.பி., தில்லி என்.சி.ஆர் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT