ஆளுநர் ஆர்.என். ரவி - முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா: ஆளுநர் ஒப்புதல்

பாலியல் வன்கொடுமை வழக்கில் கடும் தண்டனை வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

DIN

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கடும் தண்டனை வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த பத்தாம் ஆம் தேதி பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

அதில், தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய சட்டத்திருத்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து சட்டத்திருத்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கடும் தண்டனை வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆளுநரின் ஒப்புதலை அடுத்து சட்டத்திருத்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ளது.

பாலியல் வன்கொடுமை புதிய சட்டத்திருத்த மசோதா - தண்டனை விவரங்கள்:

* பாலியல் வன்கொடுமைக்கு முன்னர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை.

* நெருங்கிய உறவினர் (அ) காவல்துறை ஊழியர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் முன்னர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வைக்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை .

* 12 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் முன்னர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை (அ) ஆயுள் தண்டனை (அ) மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயுள் (அ) மரண தண்டனை.

* பாலியல் வன்கொடுமை மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்துக்கு முன்னர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயுள் தண்டனை.

* கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மரண தண்டனை.

* மீண்டும் மீண்டும் குற்றம் இழைத்தவர்களுக்கு குற்றத்துக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மரண தண்டனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT