கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

‘கர்வா சௌத்’ நோன்பை பெண்களுக்கு கட்டாயமாக்கக் கோரிய மனு தள்ளுபடி!

‘கர்வா சௌத்’ நோன்பை பெண்களுக்கு கட்டாயமாக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதைப் பற்றி...

DIN

’கர்வா சௌத்’ பண்டிகையை அனைத்து பெண்களுக்கும் கட்டயமாக்க வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனுவை அபராதத்துடன் பஞ்சாப் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், நல்வாழ்விற்காகவும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் நோன்பிருந்து ’கர்வா சௌத்’ எனும் பண்டிகையை அனுசரித்து வருவார்கள்.

இந்நிலையில், இந்த கர்வா சௌத் பண்டிகையை அனைத்து பெண்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனக்கோரி நரேந்திர குமார் மல்ஹோத்ரா என்பர் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதையும் படிக்க: செல்ஃபி எடுக்க முயன்று, ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி

அந்த மனுவில் சமூகத்தில் விவாகரத்து பெற்ற, கணவரை பிரிந்த, லிவ் இன் உறவில் இருக்கும் பெண்கள் மற்றும் விதவைகள் என விதிவிலக்கின்றி அனைத்து பெண்களும் இந்த பண்டிகையை கடைபிடிக்க வேண்டும் எனவும், பின்பற்றவில்லை என்றால் தண்டனை வழங்கப்படும் அளவிற்கு சட்டம் இயற்றப்பட நீதிமன்றம் உத்தரவளிக்க வேண்டும் எனக் கூறி அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஷீல் நாகு மற்றும் சுமீத் கோயல் தலைமையிலான அமர்வு நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், மனுதாரருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத் தொகையை ஏழை நோயாளிகளின் நல்வாழ்வு நிதியில் செலுத்த அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்ன அழகு... எத்தனை அழகு... ஜான்வி கபூர்!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... - தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

SCROLL FOR NEXT