தமிழக காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது!
குடியரசு நாளையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது தமிழகத்தைச் சேர்ந்த 23 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு நாளையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது தமிழகத்தைச் சேர்ந்த 23 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் காவல்துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது ஆண்டுதோறும் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு நாடு முழுவதும் 746 விருதுகள், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி பயணம்?
அந்தவகையில் தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான காவல்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருது ஐ.ஜி.க்கள் துரைக்குமார், ராதிகா உள்ளிட்ட 23 காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஜெயலட்சுமி, ஸ்டாலின், கூடுதல் கண்காணிப்பாளர்கள் தினகரன், பிரபாகரன், துணை ஆணையர் வீரபாண்டி, இணை காவல் கண்காணிப்பாளர்கள் மதியழகன், பாபு உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.