கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

விசாரணைக் கைதியை தப்பிக்க வைக்க முயற்சி! நண்பர் மீது வழக்குப் பதிவு!

தாணேவில் விசாரணைக் கைதியை தப்பிக்க வைக்க முயன்ற நண்பர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

மகாராஷ்டிர மாநிலத்தின் தாணே மாவட்டத்தில் நீதிமன்ற அறையிலிருந்து விசாரணைக் கைதியை தப்பிக்க வைக்க முயன்ற 19 வயது நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாணேவின் கல்யான் நீதிமன்றத்தில் நேற்று (ஜன.28) மதியம் ஆஜர் படுத்தப்பட்ட விசாரணைக் கைதியான நாகேஷ் தண்டே என்பவரின் நண்பரான சுஜித் குப்தா என்பவர் நாகேஷை தப்பிக்க வைக்கும் முயற்சியில் நீதிமன்ற அறையினுள் செய்கையில் அவரிடம் பேச முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அவரை அங்கிருந்து வெளியேறக்கூறிய காவல் துறையினரை குப்தா தாக்கி கீழே தள்ளியுள்ளார். அப்போது, அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளைப் பயன்படுத்தி நாகேஷை காவலர்களிடம் இருந்து விடுவிக்க முயற்சி செய்துள்ளார்.

இதையும் படிக்க: மண்டை ஓடுகளைத் திருடிய 2 பேர் கைது!

இதனைத் தொடர்ந்து, அவரை சுற்றிவளைத்து பிடித்த காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும், அவர் மீது காவல் துறையினரை தாக்கி அவர்களது பணியை செய்யவிடாமல் தடுத்ததிற்காக சட்டப்பிரிவு 132 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர் சாட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருவதாகவும் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

SCROLL FOR NEXT