முதல்வர் ஸ்டாலின்(கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

பிப். 6,7-ல் நெல்லைச் சீமைக்கு வருகிறேன்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் நெல்லை பயணம் குறித்து...

DIN

வரும் பிப். 6, 7 ஆகிய தேதிகளில் நெல்லைச் சீமைக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், அந்தந்த மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடக்கி வைத்தும் புதிய அறிவிப்பைகளை அறிவித்தும் வருகிறார்.

முன்னதாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை இரவு மக்கள் சந்திப்பு நிகழ்விலும், திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இதைத் தொடா்ந்து, வழுதரெட்டி பகுதியில் சமூகநீதி போராளிகள் மணிமண்டபம், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

இதையும் படிக்க: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை(ஜன. 30) அரிட்டாபட்டி வருகிறார்! - அண்ணாமலை

இந்நிலையில் வருகிற பிப். 6, 7 ஆம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் நெல்லை செல்கிறார். அங்கு கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

இது பற்றி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “2026 வெற்றிக்கு அச்சாரமாக விழுப்புரம் மக்கள் அளித்த வரவேற்பின் எழுச்சியோடு, பிப்ரவரி 6,7 தேதிகளில் நெல்லைச் சீமைக்கு வருகிறேன்...” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதல்வர் ஸ்டாலின் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் மீனவர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநாடுகள் மட்டும் விஜய்க்கு வெற்றியைத் தேடித் தராது: செல்லூா் கே. ராஜூ

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

தமிழகத்தில் நிறையும் குறையும் நிறைந்த ஆட்சி: பிரேமலதா விஜயகாந்த்

திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னையில் சமரசமில்லை! ஜி. ராமகிருஷ்ணன்

பொன்னமராவதியில் கோகுலாஷ்டமி விழா

SCROLL FOR NEXT