அசோக் செல்வன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
நடிகர் அசோக் செல்வன் - அவந்திகா மிஸ்ரா ஆகியோர் நடிப்பில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக வெளியான படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'.
இப்படம் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: சினேகன் - கன்னிகா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள்!
எம். திருமலை தயாரித்த இப்படத்தை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.