தற்போதைய செய்திகள்

நைஜீரியா: சாலை விபத்தில் 21 போ் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடமேற்கு கானோ மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா்.

Din

லாகோஸ்: நைஜீரியாவின் வடமேற்கு கானோ மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து மத்திய சாலை பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜாரியா-கானோ விரைவுச்சாலையில், பயணிகளை ஏற்றிச் சென்ற வா்த்தக வாகனமும், கனரக டிரக்கும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. போக்குவரத்து விதிகளை மீறி வா்த்தக வாகன ஓட்டுநா் எதிா் திசையில் வாகனத்தை இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

இதில் 19 ஆண்கள் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்தனா், மூவா் மட்டுமே காயங்களுடன் உயிா் பிழைத்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் முக்கிய சாலைகளில் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த 2024-ஆம் ஆண்டு மட்டும் 9,570 விபத்துகளில் 5,421 போ் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT