அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு 
தற்போதைய செய்திகள்

அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருப்பது ஏன்?: செல்லூர் ராஜு

மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்பது அனைத்து கட்சியினரின் நினைப்பாக இருப்பதால்தான் அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருக்கிறது

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்பது அனைத்து கட்சியினரின் நினைப்பாக இருப்பதால்தான் அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருக்கிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேக விழா அன்று மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அவரது மகன் நினைவாக ஆர் ஜே தமிழ்மணி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மதுரை மக்கள், பக்த கோடிகளின் வேண்டுகோள் இது. தமிழகம் முழுவதும் இன்று பேசு பொருளாக இருப்பவர் திருப்பரங்குன்றம் முருகன். திருப்பரங்குன்றம் கோயிலில் திருமணம் நடைபெற்றால் மணமக்களுக்கு இடையே பிரிவினை ஏற்படாது என்றார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என்று அமித்ஷா கூறியிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, கூட்டணி குறித்தும், ஆட்சி அமைப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக பதிலளித்துவிட்டார். தமிழக மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து செயல்படக்கூடியவர் எடப்பாடியார். எடப்பாடியாரின் ’மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ பயணம் மக்கள் வெள்ளத்தில் சென்று கொண்டிருக்கிறது. தமிழக அரசின் செயல்பாடுகளில் தேக்க நிலை இருப்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்பது அனைத்து கட்சியினரின் நினைப்பு. அதனால்தான் அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருக்கிறது. மதுரையில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம். அதுதான் எங்களுடைய திட்டம். அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அவர் கூறினார்.

The focus of political parties is on Madurai because all parties believe that holding the convention on Madurai soil will bring success.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 8-இல் நெடுந்தூர ஓட்டப் போட்டி: பங்கேற்க அழைப்பு

எஸ்.ஐ.ஆா் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் தொடங்கியது

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியவா் கைது

சமூக சீரழிவே கோவை சம்பவத்துக்கு காரணம்: ஈ.ஆா். ஈஸ்வரன்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இல்லாமல் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்:எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT