கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தல குப்பத்தில் உள்ள சென்னை கிரம்ப் இண்டஸ்ட்ரீஸ் என்கின்ற தனியார் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பல லட்சக்கணக்கான இரும்பு கழிவுகள் எரிந்து அந்த பகுதியில் புகை மூட்டத்தையும் கடுமையான நெடியையும் உண்டாக்கியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.
விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A sudden fire broke out early Friday morning at a private factory called Chennai Crumb Industries in Chintala Kuppam, next to Gummidipoondi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.