முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: தொழிலாளிகள் 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளிகள் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 23 ஜூலை, 2025 at 6:06 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளிகள் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

செவ்வாய் இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலை மஹோர் தாலுகா படோரா மலைப் பகுதியில் உள்ள சிவபெருமான் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கோயிலுக்கு செல்லும் பாதையை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவரும், நிலச்சரிவு ஏற்பட்டபோது ஒரு கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரால் இருவரின் உடல்களும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் ஒருவர் துலி கலவனைச் சேர்ந்த ரஷ்பால் சிங்(26) மற்றும் மற்றொருவர்செனானியைச் சேர்ந்த ரவிக்குமார்(23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உடல்கூறாய்வுக்கு பின்னர் அவர்களது உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

wo men were killed after a landslide triggered by heavy rains hit their tent in Jammu and Kashmir's Reasi district, officials said on Wednesday.

முழு கட்டுரையைப் படிக்க →