சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 360 குறைந்தது. 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கு விற்பனையாகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கு விற்பனையானது. தொடா்ந்து வியாழக்கிழமை தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1000 குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.9,255-க்கும், பவுனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.74,050-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.9,210-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.128-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1.28 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

The price of gold jewelry in Chennai dropped by Rs. 360 per sovereign for the second day on Friday, selling at Rs. 73,680.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

SCROLL FOR NEXT