சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு
சீனாவில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
Updated On : 4 ஜூன், 2025 at 9:36 AM
பெய்ஜிங்: சீனாவில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் புதன்கிழமை அதிகாலை 4.43 மணியளவில் அட்சரேகைக்கு 33.73 டிகிரி வடக்கிலும், தீர்க்கரேகைக்கு 81.99 டிகிரி கிழக்கிலும் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
Advertisement
Updated On : 4 ஜூன், 2025 at 9:38 AM