வங்கதேசத்தில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்! அதிர்வுகளில் சிக்கிய கொல்கத்தா!
வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவின் பகுதிகள் பாதிக்கப்பட்டது குறித்து...
வங்கதேச நாட்டில் ஏற்பட்ட 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், கொல்கத்தா உள்ளிட்ட இந்தியப் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து 188 கி.மீ. தொலைவில், வெள்ளிக்கிழமை (பிப். 27) மதியம் 1.30 மணியளவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும், வங்கதேசத்தின் நிலநடுக்கத்தால், மேற்கு வங்கம் மாநிலத்தின் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வுகள் ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
Advertisement
Advertisement
இதனால், கொல்கத்தாவில் அதிர்வுகளில் சிக்கிய பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்தியாவின் வடகிழக்கில் மேற்கு வங்கத்தின் அருகில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தில் இன்று மதியம் 12.02 மணியளவில் 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது. தொடர்ந்து, வடகிழக்கு பகுதிகளில் நிலஅதிர்வுகள் உணரப்படுவதால் அங்கு வசிக்கும் மக்களிடையே மிகுந்த பதற்றமான சூழல் நிலவுகிறது.
முன்னதாக, வங்கதேசத்தில் கடந்த நவ. 21 அன்று ஏற்பட்ட 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 9 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.
A 5.4-magnitude earthquake that struck Bangladesh has been reported to have tremors felt in parts of India, including Kolkata.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.