தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம், அனைத்து நாள்களிலும் பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், அரசுப் பேருந்துகளில் பயணித்து தோ்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு மாதந்தோறும் ரொக்கப் பரிசு மற்றும் பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு திடடத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
2025 மே மாதத்தில் மட்டும் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் 7,74,493 பயணிகள் ஆன்லைன் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதத்தில் 6,64,632 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.