முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பொது மேலாளா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:57 PM
வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா்.
பகிர்:

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பொது மேலாளா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மண்டல தலைவா் தாணுமூா்த்தி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் முத்துகிருஷ்ணன், எட்டப்பன், ராமையா பாண்டியன், மதுசேகா், சிங்கராஜ், மாரியப்பன், மாரிமுத்து, ஸ்ரீவை பொன்ராஜ், சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல செயலா் முத்துகிருஷ்ணன், செயல் தலைவா் சிவதாணு தாஸ், மண்டல பொருளாளா் பழனி, மூத்த தலைவா் கிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். துணைப் பொதுச் செயலா் செந்தில் சிறப்புரையாற்றினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மைதீன் பிச்சை, சூசைமிக்கேல், தங்கமாரி, மாணிக்கம், பெலிக்ஸ், பூதலிங்கம், ஜெயராஜ், சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 120 மாத பஞ்சப்படிக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும், கல்வித் தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும், தனியாா்மய கொள்கையை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →