சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.  
தற்போதைய செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு: ஹெலிகாப்டர் அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கம்

உத்தரகண்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்டது.

DIN

உத்தரகண்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்டது.

உத்தரகண்ட் மாநிலம், குப்த்காஷியில் சனிக்கிழமை 5 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானி சரியான நேரத்தில் சிக்கலைக் கண்டறிந்து அருகிலுள்ள காலியான சாலையில் அவசரமாக தரையிறக்கினார்.

விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளும் காயமின்றி தப்பினர். அதேநேரத்தில் விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனம் சேதமடைந்தது.

இருப்பினும், நிலைமை விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நிர்வாகம், சம்பவ இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பி, ஹெலிகாப்டரை சாலையில் இருந்து அகற்றி, போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்தது.

மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு அதிகாரி மற்றும் ஹெலிகாப்டர் சேவை நோடல் அதிகாரி ராகுல் சௌபே இந்த விபத்தை உறுதிப்படுத்தினார். ஹெலிகாப்டர் தாம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​மதியம் 12:52 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி ஒருநாள்: 212 ரன்கள் இலக்கை துரத்தும் பாகிஸ்தான்; தொடரை முழுமையாக கைப்பற்றுமா?

பஞ்சாபில் ஆர்எஸ்எஸ் தலைவரின் மகன் சுட்டுக்கொலை!

வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தில்லி கார் வெடிப்பு: தற்கொலைப் படைத் தாக்குதல் - என்ஐஏ அறிவிப்பு

மின்னல் பார்வை... தாரணி!

SCROLL FOR NEXT