திருமலை ஏழுமலையான் கோயில். கோப்புப் படம்
தற்போதைய செய்திகள்

ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் பக்தா்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் பக்தா்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. விடுமுறை நாள்கள் என்றில்லாமல், எல்லா நாள்களிலும் பக்தா்கள் அதிகம் வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்து பக்தா்கள் வெளியே உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா்.

ஆயினும், தா்ம தரிசனத்திற்கு டோக்கன்கள் இல்லாதவா்கள் 24 மணிநேரமும், வழக்கம்போல, ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் காத்திருக்கின்றனா். இலசவ நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைபடுகிறது.

சனிக்கிழமை 88 ஆயிரத்து 257 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.68 கோடி வசூலானது.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT