முதல்வர் மு.க.ஸ்டாலின் ENS
தற்போதைய செய்திகள்

பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாநில அரசின் நிதி பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு...

DIN

பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம்
மத்திய அரசைவிட மாநில அரசுதான் அதிக நிதி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தர மறுக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக அமைச்சர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மாநில அரசின் திட்டங்களில் 70% நிதி மத்திய அரசினுடையது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். முன்னதாக அமித் ஷாவும் இதுதொடர்பாக பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்! 

படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" எனச் சேலம் அரசு விழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும்" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 5 மாவட்டங்களில் மழை!

அந்தியூா் வனத்தில் அழுகிய நிலையில் புலியின் உடல் மீட்பு

அரசுப் பேருந்து மீது வேன் மோதல்

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT