மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,220 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,220 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி காவிரியில் வினாடிக்கு 25,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை காலை முதல் கபினியில் திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வர தொடங்கியது.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8,218 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 16,341 கன அடியாகவும் சனிக்கிழமை காலை வினாடிக்கு 18,220 கன அடியாகவும் அதிகரித்து உள்ளது.
Advertisement
Advertisement
நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் நேற்று காலை 113.57 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 113.69 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர் இருப்பு 83.76 டிஎம்சியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.