தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  
தற்போதைய செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில்கள் தாமதம்: காரணம் என்ன?

சென்னை கோயம்பேடு-அசோக் நகர் மெட்ரோ வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை கோயம்பேடு-அசோக் நகர் மெட்ரோ வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பெருநகர மக்கள் மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு-அசோக் நகர் மெட்ரோ வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக

பரங்கிமலை - சென்னை சென்டரல் செல்லும் வழிதடத்தில் 7 நிமிடங்களுக்கு பதில் 24 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இதனிடையே, சென்டரல் - கோயம்பேடு மற்றும் அசோக் நகர் - பரங்கிமலை இடையே எந்த பாதிப்புமில்லை என்பதால் பயணிகள் இதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தாமதம் ஏற்பட்டுள்ளதால் நீலம் வழித்தட அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி! வீறுநடை போட்ட ராணுவ வீரர்கள்!

மலையாள திரையுலகில் முதல் பெண் தலைவர்! சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றி!

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

நிழலும் அழகு... சாக்‌ஷி அகர்வால்!

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்

SCROLL FOR NEXT