கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிவுபடுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது புகார்!

கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிவுபடுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது புகாரளிக்கப்பட்டுள்ளதைப் பற்றி..

DIN

மகாராஷ்டிரத்தில் கோல்வாக்கரின் புத்தகம் சத்ரபதி சிவாஜியை இழிவுபடுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியத் தலைவரான எம்.எஸ்.கோல்வாக்கரின் ‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்’ புத்தகத்தில் மகாராஜா சத்ரபதி சிவாஜியை அவர் இழிவுபடுத்தியுள்ளதாகக் கூறி சமூக ஊடகக் கணக்குகளில் செய்திகள் பகிரப்பட்டனர். இது முற்றிலும் தவறான தகவல் எனக் கூறி இரண்டு சமூக ஊடகக் கணக்குகளின் மீது சன்வேதா பரிவார் சன்ஸதா அமைப்பின் செயலாளர் சாகர் கொட்வாலிவாலே நாக்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விரைவில் நாக்பூர் காவல் துறை ஆணையரை சந்தித்து அந்த இரண்டு முகப்புத்தக சமூக ஊடகக் கணக்குகளை நிர்வாகிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பாஜக அறிவிப்பு!

இதனைத் தொடர்ந்து, இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதை கோட்வாலி காவல் நிலைய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சைபர் குழுவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, குருஜி என்றழைக்கப்படும் எம்.எஸ். கோல்வாக்கர் கடந்த 1940 முதல் 1970 வரையிலான காலத்தின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக பதவி வகித்தார். ’பஞ்ச் ஆப் தாட்ஸ்’ எனும் புத்தகத்தில் அவரது உரைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT