சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய இசைஞானி இளையராஜா 
தற்போதைய செய்திகள்

சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை: இளையராஜா நெகிழ்ச்சி

சிம்பொனி நிகழ்ச்சி நம் நாட்டின் பெருமை, என்னுடைய பெருமை அல்ல என சிம்பொனி நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா

DIN

சென்னை: சிம்பொனி நிகழ்ச்சி நம் நாட்டின் பெருமை, என்னுடைய பெருமை அல்ல என சிம்பொனி நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவென்டிம் அப்பல்லோ திரையரங்கில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.

சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவது எனக்கான பெருமை அல்ல. நாட்டின் பெருமை... இந்தியாவின் பெருமை. இன்க்ரீடிப்பில் இந்தியா போல, இன்க்ரீடிப்பில் இளையராஜா என்றார்.

மேலும், நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான். உங்களின் பெருமையைதான் நான் லண்டனில் சேர்க்கப் போகிறேன் என்றார்.

இசை நிகழ்ச்சியின் மகிழ்ச்சி குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, சிம்பொனி இசை நிகழ்ச்சி உங்களுக்கே அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்போது எனக்கு எவ்ளோ மகிழ்ச்சி இருக்கும் என பதிலளித்த இளையராஜா, இதுக்கு மேல யாரும் வரப்போறதும் இல்லை. வந்ததும் இல்லை என்றார்.

இதைத்தொடர்ந்து இளையராஜா லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவென்டிம் அப்பல்லோ திரையரங்கில் நடைபெற உள்ள வரலாற்று சிறப்புமிக்க இசை நிகழ்ச்சியில், உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து முதல் இந்தியராக இளையராஜா, தனது முதல் மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

அப்போது தனது பிரபலமான சில பாடல்களின் பிரத்யேக இசைக்குழு பதிப்புகளை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

ரூ. 5 கோடி முறைகேடு புகாா்: சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை

நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு நடிகா் ஜெய்சங்கா் பெயா்: அரசு உத்தரவு

SCROLL FOR NEXT