கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

நாடுகடத்தப்பட்ட 112 பேருக்கு சுதந்திரம் அளிக்கும் பனாமா!

அமெரிக்காவிலிருந்து பனாமாவிற்கு நாடுகடத்தப்பட்ட 112 பேர் குறித்து...

DIN

அமெரிக்காவிலிருந்து பனாமா நாட்டிற்கு அதிரடியாக நாடு கடத்தப்பட்ட மக்களுக்கு உள்ளூரில் சுதந்திரமாக பயணிக்க அனுமதியளிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளி நாட்டவர்கள் சுமார் 112 பேர் மத்திய அமெரிக்க நாடான பனாமாவிற்கு அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர். தாரியன் பகுதியிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அவர்கள் அனைவருக்கும் மனிதாபிமான அடிப்படையில் அனுமதி சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஃபிராங்க் அப்ரெகோ இன்று (மார்ச் 7) தெரிவித்துள்ளார்.

இந்த அனுமதியின் மூலம் பெரும்பாலும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் பனாமா நாட்டிற்குள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களின் தங்குமிடங்களை தாங்களே தேர்வு செய்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! இறுதி வரை போராடிய குடும்பத்தினர்!

இந்நிலையில், முதல் 30 நாள்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி சீட்டானது அவர்களது விருப்பத்திற்கேற்ப புதுப்பித்துக்கொள்ள முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, நாடு கடத்தப்பட்ட மக்களின் கடவுச் சீட்டுக்களும் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கடுமையான முறையில் நடத்தப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பனாமாவை விமர்சித்து வந்தனர். மேலும், அவர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்க சர்வதேச ஆணையத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

SCROLL FOR NEXT