துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது: உதயநிதி ஸ்டாலின்

சர்வதேச மகளிர் நாளையொட்டி, மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

DIN

சென்னை: சர்வதேச மகளிர் நாளையொட்டி, மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி என பல்வேறு நற்பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற பெண்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக, ஆண்டுதோறும் மாா்ச் 8-ஆம் தேதி சா்வதேச மகளிா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச மகளிர் நாளையொட்டி, மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது.

கல்வி - பண்பாடு - கலாசாரம் - பொருளாதாரம் என பல்வேறு தளங்களில் மகளிரின் தற்சார்பையும் - சுதந்திரத்தையும் உறுதி செய்வதே திராவிட இயக்கத்தின் லட்சியம்.

அதனை, பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில், மகளிர் விடியல் பயணம் - புதுமைப்பெண் - கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் போன்ற மகளிர் நல திட்டங்கள் மூலம் நம் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.

மகளிர் ஏற்றத்துக்கு என்றும் அயராது உழைத்திடுவோம். மகளிர் உரிமைகளை நிலைநாட்டிடுவோம் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'பளிச்' சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!

காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி!

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

பிஞ்சுக் கைவண்ணம்

ஆட்டுக் குட்டி

SCROLL FOR NEXT