சென்னை மெரீனா உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்திய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 
தற்போதைய செய்திகள்

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் தங்கம் தென்னரசு மரியாதை!

நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, சென்னை மெரீனாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

DIN

தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை மெரீனாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், சென்னை மெரீனாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், வளர்ச்சிக்கு வித்திடும் நிதிநிலை அறிக்கையாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும், எந்தவொரு தேசிய சின்னத்தையும் அவமானப்படுத்துவதோ, குறைத்து மதிப்பிடுவதோ நோக்கம் இல்லை.

நாட்டின் ஒருமைப்பாட்டிலும் இறையாண்மையிலும் வளர்ச்சியிலும் பெரும் மதிப்பு கொண்டிருக்கக் கூடியவர்கள் என்று நிதிநிலை அறிக்கை இலச்சினையில் 'ரூ' இடம்பெற்றது குறித்த கேள்விக்கு இவ்வாறு விளக்கம் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT