தற்போதைய செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்!

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார்.

DIN

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மாா்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார்.

பட்ஜெட்டில் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்து 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

வேளாண் துறையுடன் கால்நடைத் துறை, மீன்வளத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

வேளாண் பட்ஜெட் தாக்கலையொட்டி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் பச்சைத் துண்டு அணிந்துள்ளனர்.

முன்னதாக, சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

கற்பனைகள் கவிபாடும்... சனம் ஜோஷி

SCROLL FOR NEXT