மு.க. ஸ்டாலின் - அண்ணாமலை கோப்புப் படம்
தற்போதைய செய்திகள்

கடத்தல் லாரி உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு?: அண்ணாமலை

கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு?

DIN

கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு? என தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அனுமதியின்றி கேரளத்துக்கு கனிமவளங்களைக் கடத்தியதாக, கோயம்புத்தூர் மதுக்கரை திமுக நகராட்சித் தலைவர் நூர்ஜகான் மகன் ஷாரூக்கானுக்கு சொந்தமான இரண்டு டாரஸ் லாரிகள், கோயம்புத்தூர் மாவட்ட கனிம வளத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்படும் இந்தக் கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோவதோடு, தமிழக மக்களுக்குத் தேவைப்படும் கட்டடப் பொருள்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திமுகவினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், திமுக அரசு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது இரண்டு மட்டுமே.

கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்த திமுக அரசு? என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை சமன்செய்த முகமது சிராஜ்!

உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

அழகே.. ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT