முகப்பு
தமிழ்நாடு

மக்கள் பிரச்னைகள் பற்றி எப்போது பேசப் போகிறீர்கள் முதல்வரே? - அண்ணாமலை கேள்வி

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி....

Updated On : 4 மார்ச், 2026 at 1:55 PM
முதல்வர் ஸ்டாலின் | அண்ணாமலை
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 3:27 PM

ஹிந்தித் திணிப்பை விட்டுவிட்டு மக்கள் பிரச்னையை எப்போது பேசப் போகிறீர்கள்? என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

மார்க்சிய கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஹிந்தித் திணிப்பு வெறியில் பாஜக எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் ஹிந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்றும் இல்லையெனில் தமிழர்களின் சூட்டை மத்திய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

Updated On : 4 மார்ச், 2026 at 3:27 PM

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,

"முதல்வரே, எப்போதெல்லாம் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?

இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Annamalai Questions cm stalin that When are you going to talk about people's problems

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.